முட்டை தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை: அகில இலங்கை முட்டை வர்த்தகம் தெரிவித்த தகவல்

Mayoorikka
1 year ago
முட்டை தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை: அகில இலங்கை முட்டை வர்த்தகம் தெரிவித்த தகவல்

முட்டை உற்பத்தியாளர்கள் நிலையான விலையில் முட்டைகளை வழங்கினால் 53 ரூபாவுக்கு முட்டைகளை வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது உற்பத்தியாளர்கள் வெவ்வேறு விலைகளில் முட்டைகளை வர்த்தகர்களுக்கு வழங்குகின்றனர்.

உற்பத்திச் செலவு மற்றும் இலாபத்தை வைத்து வெள்ளை முட்டையை 49 ரூபாவுக்கும் சிவப்பு முட்டையை 50 ரூபாவிற்கும் வியாபாரிகளுக்கு வழங்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்தால் நுகர்வோருக்கு சில நிவாரணம் கிடைக்கும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

பண்டிகை காலம் என்பதால், முட்டைக்கு அதிக கேள்வி இருந்தாலும், சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கிடைக்கும் முட்டை 60 ரூபா முதல் 70 ரூபா வரையான விலைகளில் விற்கப்படுகிறது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையானது முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 43 மற்றும் 45 ரூபா வரை நிர்ணயித்திருந்தது.

எவ்வாறாயினும், கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுடன், முட்டைக்கான சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!