பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது
Prathees
2 years ago

வெலிவேரிய மற்றும் களனி பிரதேசங்களில் வீடுகளை உடைத்தல் மற்றும் சொத்துக்களை திருடுதல் போன்ற பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பேலியகொட, நவலோக சுற்றுவட்டத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தம்புள்ளை மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
திருடப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி, டேப் கம்ப்யூட்டர், கையடக்கத் தொலைபேசி, புல்வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட பல சொத்துக்களை சந்தேகநபர்கள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



