'ஐஸ்' போக்குவரத்தின் முக்கிய மையமாக இலங்கை விளங்குகிறது: இன்டர்போல் தகவல்

Prathees
1 year ago
'ஐஸ்' போக்குவரத்தின் முக்கிய மையமாக இலங்கை விளங்குகிறது:  இன்டர்போல் தகவல்

ஐஸ் அல்லது கிரிஸ்டலைன் எனப்படும் செயற்கை போதைப்பொருளின் போக்குவரத்துக்கான பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் அல்லது சர்வதேச பொலிஸாரால் தெரியவந்துள்ளது.

இன்டர்போல் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட லயன் ஷிப் நடவடிக்கையின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளதுடன், 22 நாடுகளுக்கு இந்த ஐஸ் போதைப்பொரு கடத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள் 500 பேர்போன பார்ச்சூன் நிறுவனங்களுக்கு சமமான கிரிமினல் கும்பல்களால் கடத்தப்படுவதாக இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜூர்கன் ஸ்டாக் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் ஐஸ்  அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதாகவும், பல புதிய போதைப்பொருள் போக்குவரத்து வழிகள் உருவாகியிருப்பதாகவும் இன்டர்போல் கூறுகிறது.

இந்த ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மிகவும் தீங்கு விளைவிப்பவை என தெரியவந்துள்ளதுடன், ஐஸ் போதைப்பொருளில் ஈடுபட்ட 24 இலங்கை கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!