கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரிப்பு: இதுவரை 72,321 நோயாளிகள்

Prathees
1 year ago
கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரிப்பு:  இதுவரை 72,321 நோயாளிகள்

இந்த வருடத்தை விட அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பூச்சியியல் அதிகாரிகள் வழங்கும் தரவுகள் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்க கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இலங்கையில் 72,321 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,924 எனவும் இதன்படி இவ்வருடம் ஏறக்குறைய இரண்டு மடங்காக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நுளம்பு பெருக்கத்தைக் குறைப்பது இன்றியமையாததாக இருந்தாலும், சுகாதார அமைச்சும் பொதுமக்களும் அதற்கான தலையீடுகளை மேற்கொள்ளாத காரணத்தினால் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!