ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கேற்ற முட்டாளை கண்டறிந்த பின் பதவியில் இருந்து விலகுவேன் - எலோன் மஸ்க்

Kanimoli
3 years ago
ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கேற்ற  முட்டாளை கண்டறிந்த பின்  பதவியில் இருந்து விலகுவேன் - எலோன் மஸ்க்

ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கேற்ற ஒரு  முட்டாளை கண்டறிந்த பின்னர், தான்,அந்த  பதவியில் இருந்து விலகுவதாக இலோன் மஸ்க் கூறியுள்ளார்.

கடந்த ஞாற்றுக்கிழமை நடத்தப்பட்ட, ட்விட்டர் வாக்கெடுப்பின் முடிவுக்கு அமைய,  57.5% பயனர்கள் அவர், அந்த பதவியில் விலகுவதற்கு   "ஆம்" என்று வாக்களித்துள்ளனர். 47 வீதமானோர் இல்லை என்று வாக்களித்தனர்.

இந்தநிலையில்  தாம், குறித்த பதவியில் இருந்து விலகிய பின்னர், மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களை இயக்கப்போவதாக என்று மஸ்க்  கூறியுள்ளார்.

அவர் பதவியேற்றதிலிருந்து ஏற்படுத்தப்பட்ட  மாற்றங்கள் குறித்து  விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதேவேளை மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் இயக்குகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4