ஹோமாகம சம்பவம் தொடர்பில் மூன்று அதிகாரிகளுக்கு விசாரணைக்கு அழைப்பு!

#SriLanka #Death #Police #LANKA4 #Injury #officer
Abi
1 hour ago
ஹோமாகம சம்பவம் தொடர்பில் மூன்று அதிகாரிகளுக்கு விசாரணைக்கு அழைப்பு!

ஹோமாகம காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, காவல் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, குறித்த அதிகாரிகள் நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, உயிரிழந்த இளைஞரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில், ஹோமாகம காவல் நிலையத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!