வவுனியா தெற்கில் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஆளுநரால் திறந்து வைப்பு!

#SriLanka #Vavuniya #LANKA4 #House #Open
Abi
1 hour ago
வவுனியா தெற்கில் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஆளுநரால் திறந்து வைப்பு!

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் வீட்டுத் திட்டத்தின் கீழ், வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் இன்று (28) திறந்து வைத்தார்.

முதலாம் கட்டத்தின் கீழ் 18 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மதுராநகரில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டையே ஆளுநர் திறந்து வைத்தார்.

குறித்த பிரதேச சபைக்கு இத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் இரண்டு வீடுகளும், இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒரு வீடும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, சலலிகினிஹம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளையும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் பொதுக் கிணற்றையும் ஆளுநர் நேரில் பார்வையிட்டார். 

அத்துடன், அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆராய்ந்தார்.

மேலும், பிரதேச சபைக்குச் சொந்தமான போகஸ்வௌ வீதியைப் பராமரிப்பதில் நிலவும் சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த வீதியை உரிய நடைமுறைகளுக்கு அமைய வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆளுநர் ஆராய்ந்தார்.

இதன்போது, மண்குடிசைகளில் வசித்து வந்த தங்களுக்கு கல் வீடுகளில் வாழும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்காக மதுராநகர் மற்றும் சலலிகினிஹம பகுதி மக்கள் வடக்கு மாகாண சபைக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

இந்த விஜயத்தில் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையின் தவிசாளர் அமித் மற்றும் சபையின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!