நாடு முழுவதும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Kanimoli
3 years ago
நாடு முழுவதும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

நாடு முழுவதும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் (21.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நத்தார் வழிபாடுகள் நடைபெறும் தேவாலயங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் நகரங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4