சீனாவால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து -கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுமா?

Nila
3 years ago
சீனாவால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து -கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுமா?

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொரோனா பாதுகாப்பினை கட்டுப்பாடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவால் சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச விநியோகத்திற்கான பாதிப்பு குறித்தும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் ஆபத்தான புதிய கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தால் மாத்திரமே 2020 போன்ற சூழ்நிலை ஏற்படும் என  கருத்து வெளியிட்டுள்ள நிபுணர்கள் அதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க மறுத்துள்ளனர்.

பலநாடுகளில் கொரோனாவின் பல்வேறுபட்ட மாதிரிகள் காணப்படுகின்றன ஆகவே புதிய வைரஸ் தோன்றினால் மாத்திரமே பெருந்தொற்று ஆபத்து மீண்டும் ஏற்படும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

எனினும் வெவ்வேறு  வைரஸ்கள் தோன்றக்கூடிய ஆபத்துள்ளது இதன் காரணமாக நாங்கள் கண்காணிப்பை பலப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.உலகில் தற்போது அதிகளவு கொரோனா நோயாளர்கள் சீனாவிலேயே நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றனர்  என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அடுத்த சில மாதங்களில் 800 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4