பாடசாலைக்கு மாணவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த நபர் கைது: யாழில் சம்பவம்

Mayoorikka
3 years ago
பாடசாலைக்கு மாணவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த நபர் கைது: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருளை வழங்கிய நபரை குற்றப்பட்டுலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ் நகர  குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் நகரப் பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து அதன் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த போதைப்பொருளை பாக்குடன் கலந்து சந்தேகநபர் அந்த போதைப்பொருளை சிறிய பிளாஸ்டிக் பையில் வைத்து யாழ்.நகரில் உள்ள பல பாடசாலை மாணவர்களுக்கு வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ் நகரை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4