பிரபல தொழிலதிபரின் படுகொலையில் நீடிக்கும் மர்மம்...

Nila
3 years ago
பிரபல தொழிலதிபரின் படுகொலையில்  நீடிக்கும் மர்மம்...

படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி  பொரளை பொது மயானத்தில் மிகவும் மர்மமான முறையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் அவரின் காருக்குள் இருந்து மீட்கப்பட்டார்.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அன்றிரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் ஏற்கனவே 58 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய தொலைபேசித் தகவல்களின் பகுப்பாய்வு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தினேஷ் ஷாப்டரின் நெருங்கிய உறவினர்கள் பலரது வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகத்திற்குரிய தகவல்கள் எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4