தனக்குத்தானே கொரோனாவை வரவழைத்த சர்ச்சையை ஏற்படுத்திய சீன பாடகி

Prasu
3 years ago
தனக்குத்தானே கொரோனாவை வரவழைத்த சர்ச்சையை ஏற்படுத்திய சீன பாடகி

சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பி.எப்.7 ஒமைக்ரான் என்ற வகை வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் சீனாவின் பிரபல பாடகி ஒருவர் தனக்குத் தானே கொரோனாவை வரவழைத்து உள்ள சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

சீனாவின் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான ஜேன் ஜாங் (38) ஆங்கில வருடப் பிறப்பையொட்டி டிசம்பர் 31-ந்தேதி இரவு இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று கருதி உள்ளார். 

இதனால் கொரோனா பாதித்த தனது நண்பர்களை வேண்டுமென்றே அவர்கள் சிகிச்சைபெறும் மையங்களுக்கு சென்று சந்தித்து உள்ளார். 

இதனால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். சீன சமூக வலை தளங்களில் 4.3 கோடி பின்தொடர்பவர்களை கொண்டிருக்கும் ஜேன்னின் இந்த பொறுப்பில்லாத செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 

ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமாக உள்ள நிலையில் பிரபலமான பாடகியே இப்படி செய்ததற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4