இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்கு அடுத்த ஆண்டு தீர்வு - மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஜனாதிபதி ரணில்

Nila
1 year ago
இலங்கையின் பொருளாதார  பிரச்சினைகளுக்கு அடுத்த ஆண்டு தீர்வு - மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஜனாதிபதி ரணில்

அரசாங்கத்திடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பணவீக்கம் அதிகரித்துள்ளமையால் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைமையை நாம் மறந்து விடவில்லை என்றும், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை கட்டம் கட்டமாக தீர்த்து அடுத்த வருடம் மக்களுக்கு மேலும் நிவாரணங்கள் வழங்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நுவரெலியா நகர மண்டபத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான மாவட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

 ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தான் அரசியலில் ஈடுபடவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, வாழ்க்கைச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!