மேல்மாகாணத்தில் பாடசாலைகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதைனையில் பல மாணவர்கள் கைது!

Mayoorikka
3 years ago
மேல்மாகாணத்தில் பாடசாலைகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதைனையில் பல மாணவர்கள் கைது!

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது மிரிஹானவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய பாடசாலை மாணவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகாமையில் நேற்று காலை 6.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சோதனையின் போது 1.260 கிலோகிராம் 'மாவா', 9.630 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 2.38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் கஞ்சா ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இதில் குறித்த மாணவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4