இன்றைய வேத வசனம் 24.12.2022:அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 24.12.2022:அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால்

கர்த்தர் சாலமோனை இந்த உலகத்தில் உள்ள ஐசுவரியத்தினாலும் ஞானத்தினாலும் மிகவும் அதிகமாக ஆசீர்வதித்திருந்தார்.

சாலமோனைப் போல ஐசுவரியத்திலும் ஞானத்திலும் கனம் பெற்றவன் இந்த உலகத்தில் ஒருவனும் இல்லை.

சாலமோனுடையத் தரிசனத்தைத் தேடுவதற்குப் பற்பல நாடுகளில் இருந்தும் வந்துக் காத்துக் கிடந்தார்கள்.

இந்தச் சாலமோனுடையக் காலத்தில் பொன் வெள்ளியைப் போலத் தான் மதிக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஐசுவரியங்களைப் பெற்ற சாலமோனின் கடைசிக்காலத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் குறைவு பட்டது.

கர்த்தர் அகியா தீர்க்கத்தரிசியைக் கொண்டு இந்தச் சாலமோனுடைய நாட்களுக்குப் பிறகு இஸ்ரவேலின் ராஜ்ஜியம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்று கூறினார்.

இப்படிச் சாலமோனுடைய வாழ்க்கையில் கிடைத்த சாபங்களுக்குக் காரணம் என்னவென்று பார்ப்போம்.
1.கர்த்தரின் கட்டளைகளை மீறுதல்:

சாலமோன் தனக்கு ஞானத்தையும் ஐசுவரியத்தையும் கனத்தையும் கொடுத்த தன்னுடையத் தேவனாகியக் கர்த்தரை மறந்து தன்னுடைய மனைவிகளின் விருப்பப்படி கர்த்தர் அவனை எச்சரித்திருந்தும் அந்நிய தெய்வங்களைத் தேடிக் கர்த்தரை விட்டு விட்டான்.

"ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார். (#I_இராஜாக்கள் 11:9,10)

2. அந்நியத் தெய்வங்களுக்குப் பலீபிடம் கட்டுதல்:
சாலமோன் ராஜா அந்நியத் தேவர்களைத் தேடினதும் அல்லாமல் அந்தத் தெய்வங்களுக்குத் தன்னுடைய மனைவியரின் விருப்பப்படி அவைகளுக்குக் கோவில்களைக் கட்டி அவைகளுக்குப் பலியிடவும் செய்தான்.
இஸ்ரவேல் ஜனங்களையும் கர்த்தரைவிட்டு வழிவிலகிப்போகச் செய்தான். இப்படி அவன் செய்தக் காரியங்களினிமித்தம் கர்த்தர் அவன் மேல் மிகவும் கோபமானார்.

"அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீததைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன்." (#_Iஇராஜாக்கள் 11:33)

3. சிற்றின்பப் பிரியனாக வாழ்ந்தான்:
சாலமோன் ராஜா தான் வாழ்ந்தக் காலத்திலே தனக்காகப் பெண்களைக் கொள்ளுவதிலும் தன்னுடைய மனைவியருக்காக அரண்மனைகளைக் கட்டுவதிலும் தன்னுடைய மனைவியரின் ஆசைகளை நிறைவேற்றுவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து உலகத்திலும் அதின் ஆசைகளிலும் சிக்குண்டு சிற்றின்பப் பிரியனாகத் திரிந்துக் கர்த்தரை விட்டுவிட்டான்.

"சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும் முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவனது இதயத்தைத் தவறான வழியில் திருப்பி விட்டார்கள்." (இராஜாக்கள் 11:3)
நாமும் கர்த்தருடையக் கட்டளைகளை மீறி நடந்து, அந்நியத் தெய்வங்களை நாடி, இந்த உலகத்தின் சிற்றின்பங்களிலேச் சிக்குண்டு அலைவோமானால் நாமும் கர்த்தர் நமக்குத் தருகின்ற ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும்.

மாறாக நாம் கர்த்தருக்குப் பிரியமாய் நடந்து, உலகத்தின் ஆசைகளை விட்டு நடப்போமானால் பரலோக இராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொள்ளுவொம்.
நாம் கர்த்தருக்குப் பிரியமாக நடக்கிறோமா? என்பதை சிந்திப்போம்!!
ஜெபம்: அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே நான் உமக்குப் பிரியமாக நடந்து அதன் மூலமாக பரலோக இராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொள்ள உதவி புரியும்.

ஆமென்!! அல்லேலூயா!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!