இலங்கையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாநாட்டுக்கு பில்கேட்ஸுக்கு அழைப்பு?

Nila
1 year ago
இலங்கையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாநாட்டுக்கு பில்கேட்ஸுக்கு அழைப்பு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் இலங்கையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாநாட்டுக்கு, உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான பில்கேட்ஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாநாடு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்பாடு செய்யுமாறு காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்ருவான் விஜயவர்தன ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஈடுபட்டுள்ள பல தலைவர்களை இலங்கைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டுக்கு வரும் முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன வாராந்த பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!