அநுராதபுரம் - எப்பாவல, கிராலோகம பகுதியில் காணாமல் போன சிறுவன் ரிகில்லகஸ்கடவில் மீட்பு!
Nila
2 years ago

எப்பாவல - கிரலோகம, கெடதிவுல பிரதேசத்தில் காணாமல் போன ஒன்பது வயது சிறுவன், ரிக்கில்லகஸ்கட - ஜோன்ஸ்லன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மின்சார திருத்த வேலைகளில் ஈடுபடும் நபர் ஒருவரின் நெருங்கிய நண்பரின் வீட்டில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பின்னர், சம்பந்தப்பட்ட மின்சார திருத்த வேலை செய்யும் நபரை காவல்துறையினர் அங்கு இருந்த போது கைது செய்தனர், காணாமல் போயிருந்த சிறுவனையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் கடந்த 19ஆம் திகதி இரவு முதல் காணாமல் போயுள்ளதாக தாய் காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.



