மீண்டும் அமெரிக்கா சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய
Prathees
2 years ago

இலங்கையின் முன்னாள் 7வது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் இன்று டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேத்தி ஆகியோர் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்குழுவினர் இன்று அதிகாலை 02.55 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறையினூடாக புறப்பட்டனர்.
இக்குழுவினர் முதலில் டுபாய் சென்று பின்னர் அமெரிக்கா செல்வதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்கள் இல்லை.



