இலங்கையில் அடுத்த நான்கு நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு!
#SriLanka
#Power
Nila
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
நாளை (டிசம்பர் -27) முதல் டிசம்பர் - 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த நாட்களில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின் இணைப்பை துண்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



