சமுர்த்தி வங்கியின் பணப் பெட்டகத்தை திருடி வடிகாலில் விட்டுச் சென்ற திருடர்கள்

Prathees
1 year ago
சமுர்த்தி வங்கியின் பணப் பெட்டகத்தை திருடி  வடிகாலில் விட்டுச் சென்ற திருடர்கள்

புத்தளம் நகரிலுள்ள பாலாவி சமுர்த்தி வங்கிக் கிளைக்குள் திருடர்கள் குழுவொன்று புகுந்து அங்கிருந்த பெரிய பெட்டகத்தை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இதனை எடுத்துச் செல்ல முடியாமல் வீதிக்கு அருகில் உள்ள வடிகாலில் விடப்பட்டிருந்த நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26ஆம் திகதி பிற்பகல் சமுர்த்தி வங்கியின் அதிகாரி ஒருவர் வங்கிக் கிளைக்கு வந்தபோது, ​​வடிகாலில் இது பெட்டகம் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

சமுர்த்தி உறுப்பினர்களின் தினசரி பணம் மற்றும் முக்கிய கடிதங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வளவு பணம் உள்ளது என்பதை கூற முடியாது எனவும் சமுர்த்தி வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 23ஆம் திகதி சமுர்த்தி வங்கி அலுவலகம் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த 24ஆம் திகதி அல்லது 25ஆம் திகதி இரவு வங்கிக் கிளைக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாய்க்கு அருகில் உள்ள வங்கிக் கட்டிடம் அமைந்துள்ள காணிக்குள் திருடர்கள் நுழைந்துள்ளதாக பொலிஸாரிடம் இருந்து தெரியவந்துள்ளது.

வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அலுவலக வளாகத்தில் இருந்த பெட்டகத்தை உடைக்க சில முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அதை உடைக்க முடியாததால், அதை எடுத்துச் செல்ல முயன்றனர்.

300 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள இந்தப் பெட்டகத்தை திருடர்கள் எடுத்துச் செல்ல முற்பட்டதாகவும், அது முடியாமல் போனதால் அருகில் உள்ள வாய்க்காலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், குறித்த பெட்டகத்தை திருடர்களால் திறக்க முடியவில்லை என பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புத்தளம் தலைமையக பிரதான பரிசோதகர் எச். பி. என். குலதுங்கவின் பணிப்புரையின் பேரில், புத்தளம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி உப பொலிஸ் பரிசோதகர் ஜீவன் குமாரவின் வழிகாட்டலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!