டின் மீன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது: மீன் உற்பத்தியாளர் சங்கம்
Prathees
2 years ago

சில டின் மீன் கைத்தொழில்களின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக டின் மீன் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர் கமால் அதரMராச்சி தெரிவித்தார்.
டின்மீன்களின் விலையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கமால் அதரஆராச்சி தெரிவித்தார்.
இதன்படி இத்தொழிற்சாலைகளின் தற்காலிக பணியாளர்கள் விரும்பினால் இராஜினாமா செய்யலாம் எனவும் அதற்காக அவர்களுக்கு மூன்று மாத கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் கமால் அதரஆராச்சி தெரிவித்தார்.
இதன் காரணமாக மீனவர்கள் பிரச்சினைக்குரிய சூழலுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என தெரிவித்த அதரஆராச்சி , அனைத்து டின் மீன் தொழிற்சாலைகளும் இந்த உடன்படிக்கையை எட்டியுள்ளனவா என்பதை கூற முடியாது எனவும் தெரிவித்தார்.



