இலங்கையின் தேயிலைத்துறை பாதுகாக்க ஒப்பந்த பயிர்செய்கை முறை உதவும்- ஆய்வு

Kanimoli
1 year ago
இலங்கையின் தேயிலைத்துறை பாதுகாக்க ஒப்பந்த பயிர்செய்கை முறை உதவும்- ஆய்வு

இலங்கையின் தேயிலைத்துறையை காப்பாற்றுவதற்கு குத்தகை செய்கை முறை உதவும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் யோகராஜன் பரிந்துரைத்துள்ளதாக இந்திய செய்தியாளரான பி.கே பாலசந்திரன், தமது ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேயிலை தொழில்துறை நெருக்கடியில் உள்ளது. சீனா, இந்தியா, வியட்நாம் மற்றும் கென்யா போன்ற தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. அத்துடன்; தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உற்பத்திச் செலவு கிலோவுக்கு 3.11 அமெரிக்க டொலர்களான உள்ளன. பங்களாதேஷில் 1.35 அமெரிக்க டொலர்கள், இந்தியாவில் 1.25 அமெரிக்க டொலர்கள், கென்யாவில் 1 அமெரிக்க டொலர்கள், வியட்நாமில் 0.75 அமெரிக்க டொலர்களான அமைந்துள்ளன.
தொழிலாளர் உற்பத்தித்திறன் இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 18 முதல் 22 கிலோகிராம் வரை உள்ளது
எனினும் இது போட்டியிடும் நாடுகளில் தொழிலாளர் உற்பத்தித்திறன் ஒரு நாளைக்கு 30 முதல் 60 கிலோ வரை உள்ளது.
2018 இல், இலங்கையில் தேயிலையின் சராசரி உற்பத்தித் திறன் வருடத்திற்கு ஹெக்டெயருக்கு 1500 கிலோவாக இருந்தது, அதே சமயம் இந்தியாவில் வருடத்திற்கு 2227 ஹெக்டேயருக்கு 2227ஆக இருந்தது. கென்யாவில் வருடத்திற்கு 2104 கிலோவாக இருந்தது.

இந்தநிலையில் அதிக மற்றும் நிலையான ஊதியங்களைக் கோருவதற்கு முன்னர் தங்களால் இயன்றதைச் செய்வதில் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை இலங்கையின் பெருந்தோட்ட நிறுவனங்கள் குறைகூறுகின்றன.
அத்துடன் இலங்கையில் அதிக உற்பத்திச் செலவை மேற்கோள்காட்டி அதிக சம்பளம் கொடுக்க இயலவில்லை என்று அவை கூறுகின்றன.
ஆனால் குறைந்த கூலி, குறைந்த ஊக்குவிப்பு மற்றும் மோசமான வேலை நிலைமைகள் காரணமாக தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்று தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
பழைய தேயிலை மரங்களும் குறைந்த தொழிலாளர் உற்பத்திக்கு பங்களிக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதிய ஊதியத்தின்படி, மாதத்தில் 20 நாட்கள் வேலை செய்பவர்களுக்கு சுமார் 17,000 முதல் 18,000 ரூபா வருமானம் கிடைக்கிறது.
இது மாத வருமானத்தில் 40வீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
எனினும் மாதாந்த கடன் அர்ப்பணிப்புக்களை கழித்து வெறும் 10ஆயிரத்து 520 ரூபாவே அவர்களுக்கு மிஞ்சுகின்றன.
இந்தநிலையில் பல தோட்டங்களில் உள்ள நிர்வாகங்கள் புதிய ஊதியத்தின் மூலம் அதிகபட்ச பலனைப் பெறுவதற்குத் தொழிலாளர்களுக்குப் போதுமான வேலை நாட்களை வழங்க முடியாத நிலையில் இருப்பதாக பேராசிரியர்களான சந்திரபோஸ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது இலங்கையின் பொதுவான குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாகும். கொள்கை கற்கை நெறிக்கான நிறுவனத்தின் ஆய்வுப்படி, இலங்கையில் 2019 இல், குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியம் 23,785 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டதை அவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளனர்.
எனவே  பெருந்தோட்டங்களில் பயன்படுத்தப்படாத காணிகளை அந்தந்த நிறுவனங்கள், தேயிலை உற்பத்தி செய்வதற்காக தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்;பினரும் ராஜதந்திரயுமான ஆர் யோகராஜன் பரிந்துரைத்துள்ளார்.
நிலத்தின் உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருக்கும், ஆனால் தொழிலாளி அதில் பயிர்ச்செய்வதன் மூலம் வாழ்வாதாரம் பெறுவார் என்று அவர் விளக்கியுள்ளார்.
இந்த 'ஒப்பந்த விவசாய முறை', தேயிலை தொழிலில் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும், அவர்களை கடினமாக உழைக்க ஊக்குவிக்கும் மற்றும் தோட்டங்களில் இருந்து இளைஞர்கள் வெளியேறுவதை தடுக்கும் என்றும் யோகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!