கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளது - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
Kanimoli
2 years ago

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அந்த வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின் படி, இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



