தாழமுக்கம் இலங்கை கரையை கடந்து செல்வதாக தகவல் !
Prabha Praneetha
2 years ago

நாட்டின் மேற்கு திசையில் வலுப்பெற்ற தாழமுக்கம், இலங்கை கரையை கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், வடக்கு, வட மத்திய, கிழக்கு, மேல், சபரகமுவ, வட மேல் மாகாணங்களில் இன்றுமாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.



