சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு...
Prabha Praneetha
2 years ago

இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச ஊழியர்களே இவ்வாறு ஓய்வு பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களை சமநிலைப்படுத்துவதற்கான பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



