ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் ஆஷூ மாரசிங்க 1.5 பில்லியன் ரூபாவை நட்டஈடாகக் கோரியுள்ளார்.

தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் ஆஷூ மாரசிங்க 1.5 பில்லியன் ரூபாவை நட்டஈடாகக் கோரியுள்ளார்.
இந்த மாத நடுப்பகுதியில் கொழும்பில்; நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமக்கு அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் கூறியே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷா கரந்தன ஆகியோரிடம் முறையே 500 மில்லியன் ரூபா மற்றும் ஒரு பில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கவேண்டும் என்று கோரி மாரசிங்க கடிதம் அனுப்பியுள்ளார்.
ஹிருணிகா மற்றும் ஆதர்ஷா ஆகிய இருவரும், 14 நாட்களுக்குள் நட்;டஈடாக 1.5 பில்லியன் ரூபாவை செலுத்தவேண்டும்.
இல்லையேல், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாரசிங்கவின் சட்டத்தரணி மலின் ராஜபக்ஷ ஊடாக இந்தக் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆஷூ மாரசிங்க வளர்ப்பு நாயொன்றை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் காணொளிக்காட்சியை, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதன் பின்னர் அது வைரலாகியுள்ளது.
எனினும் இந்த காணொளி முற்றிலும் பொய்யானது என்றும் உண்மையை திரிபுபடுத்துவதாகவும் தனது கட்சிக்காரரால் தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக சட்டத்தரணி மலின் ராஜபக்ச தெரிவித்தார்



