இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் விஷம் அருந்திய தாய்: மூவரும் ICUவில்...!
#Hospital
#children
#Poison
Prathees
2 years ago

தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததாகவும், மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா நால்லபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா நால்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொலுவாகொட பிரதேசத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எட்டு வயது மகளும் ஐந்து வயது மகனும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழந்தைகளின் தந்தை ஓடு செய்யும் தொழிலாளி என்பதுடன் குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



