ATM இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருட்டு
Prathees
2 years ago

தென் மாகாணத்தின் மூன்று நகரங்களில் அமைந்துள்ள மூன்று ATM இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்டுள்ளது.
ஹிக்கடுவ, காலி மற்றும் பத்தேகம ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று ATM இயந்திரங்களில் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் போது, ஏடிஎம் இயந்திரத்தின் கணினியில் சிலர் ஊடுருவி மென்பொருளை மாற்றியமைத்துள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



