இலங்கையில் அடுத்த வருடத்தில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த வருடத்தில் பாரியளவு குறைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
சதொச விற்பனை நிலையங்களில் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை சதொச விற்பனை நிலையங்களில் பல தடவைகள் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளமை தமது சொந்த நோக்கத்துக்காக அல்ல என்றும் வேலைத் திட்டம் சிறந்தது என்றால் அதனை முன்னெடுத்துச் செல்வதே தமது நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,
அரசாங்கமானது ஒரு கிழமைக்கு போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஒரே தடவையில் கொள்வனவு செய்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மிக அதிகமாக கொள்வனவு செய்யப்பட்டே சதொசவுக்கு வழங்கப்படுகிறது. அப்போது கொள்வனவு செய்யப்படும் விலையைப் பொறுத்தே நாம் நுகர்வோருக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க முடிகிறது.
சந்தையில் அடிக்கடி விலைகளில் மாற்றம் ஏற்படுகின்றன. அதற்கு அவசியமான நடவடிக்கைகளை வர்த்தக அமைச்சர் என்ற வகையில் தாம் முகாமைத்துவம் செய்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



