இலங்கையர்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை

#SriLanka #Corona Virus #Covid 19 #Covid Variant #கொரோனா
Nila
1 year ago
இலங்கையர்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து இலங்கை முழுமையாக வெளியேறவில்லை என சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் அடிப்படை சுகாதார நடைமுறைகளை அனைவரும் தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கியம் என பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீனா, இந்தியா போன்ற பல நாடுகளில் சமீபகாலமாக கொவிட் நோயாளர்கள் அதிகரித்து வருவதாகவும், எச்சரிக்கையாக இருப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் தற்போது எமக்கு கடுமையான கொவிட் அச்சுறுத்தல் இல்லையென்றாலும், நாங்கள் முழுமையாக ஆபத்தில் இருந்து வெளியேறிவிட்டோம் என கூற முடியாது. அது எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பாதுகாப்பாக இருப்பதற்கு மிகவும் திறமையான மற்றும் எளிமையான வழி, ஒரு மீட்டர் தூரத்தை பராமரித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை கழுவுதல் போன்ற அடிப்படை சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாளாந்தம் சில நோய்த்தொற்றுகள் மாத்திரமே பதிவாகி வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான அனைத்து தொற்றாளர்களும் கொவிட் சோதனைகளுக்கு உட்படுத்தப்படாததால் சமூகத்தில் அதிக நேர்மறையான தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!