2023, 2024 ஆம் வருடங்களில் இலங்கையின் முழு கல்விமுறையில் மாற்றம் - நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதியகல்வி சீருத்தம்
2023 இலங்கையின் ஒட்டுமொத்த கல்வி முறையும் முற்றாக மாற்றப்படுவதற்கான அடித்தளம் போடும் ஆண்டாக கல்வி அமைச்சால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கற்பிக்கும் முறை மற்றும் பரீட்சை முறை, கணிப்பீட்டு புள்ளிகள் வழங்கும் முறை அனைத்தும் அடுத்த வருடம் முதல் முற்றாக மாற்றப்படுகிறது. கல்வி அமைச்சின் வரைவு வெளியானது.
2023ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதோடு, 8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடமாக அறிமுகப்படுத்தப்படும்
தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் வேலை வாய்ப்புகளைத் தேடுவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடினமான பணியாக இருக்கும்
கணிணி அறிவின்றி 2023 இல் ஆசிரியர்கள் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட முடியாது.
1.பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நீக்கம்..அதற்குப் பதில் இதழ்வடிவ முறை (மொடியுல்)
2.முன்பள்ளி, தரம் 1,6,10 பூரண கலைத்திட்ட மாற்றம் 2023
3.பாடவேளைகள் 1 மணித்தியாலம் ஒரு நாள் 5 பாடவேளை மிகுதி உடற்கல்வி செயற்பாடுகள்
4.பாடசாலை தவனண முறை நீக்கம்... semister முறை அறிமுகம் 1 semister 12-14 வாரங்கள்
5.கற்றல் பேறு நீக்கம்... விருப்புக்குரிய நோக்கம் அறிமுகம்
6.கலவை கற்பித்தல் முறை அறிமுகம்
1.நேரடியாக கற்றல்
2.ICT கற்றல்( zoom, YouTube)
7.மொடியுல் தீம் அடிப்படையில் உருவாக்கம்
8.தரம் -9 இல் தேசிய பொது பரீட்சை அறிமுகம்
9.இடைநிலை பிரிவு மாற்றம்..... சிரேஷ்ட இடைநிலை தரம் 12-13, கனிஷ்ட இடைநிலை 6-11
10. தேசிய கல்வி குறிக்கோள் 6
11.பொது பரீட்சையில் எழுத்து பரீட்சைக்கு 60% புள்ளிகள் மிகுதி 40% செய்முறை அனைத்து பாடங்களுக்கும்
12. புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் mindset மாற்றம் தொடர்பான செயலமர்வுகள் 2021 இல் ஆரம்பம்.... இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி.
13.PTS பாடம் நீக்கம்
14.மீத்திறன் கூடிய மாணவர்கள் உரிய மொடியுல்களை குறிப்பிட்ட காலத்திற்கு முன் பூர்த்தி செய்து வகுப்பேற்றம் பெறலாம்..
அனைத்து வகுப்பறையிலும் மடிக்கணிணி மூலமே கற்றல் இடம்பெறும் 2023 தரம் 1,6,10 வகுப்பறைகள் மாற்றத்திற்குள்ளாகும்.
இவ் புதிய வரைபுக்கு கல்வி மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.