மின் கட்டண சட்ட திருத்த மசோதா இன்று அமைச்சரவையில்

மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைய இவ்வருடம் வெட்டுக்கள் இன்றி மின்சாரத்தை வழங்குவதே இந்த மின் கட்டண திருத்தத்தின் நோக்கமாகும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதன்படி, 2023ஆம் ஆண்டு மின் உற்பத்திக்கான செலவீனத்திற்கு ஏற்ப கட்டணங்களை திருத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
இந்த திருத்தத்தின் மூலம் 60 தொடக்கம் 65 வீதம் வரை மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
இதன்படி 29.14 ரூபாவாக உள்ள மின் அலகு ஒன்றின் விலை 48.42 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.
ஜனவரி மாதக் கட்டணத்தில் இருந்து அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை மின்சார நுகர்வோர் செலுத்த வேண்டியிருக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளார்.



