இலங்கையில் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

#SriLanka #exam #School #education #Ministry of Education
Nila
1 year ago
இலங்கையில்  ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள  உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(02.01.2023) ஆரம்பமாகின்றது.

இந்நிலையில் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பில் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட திகதியில் உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் செயற்பட்டு வருவதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தற்போது திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தாள் அல்லது ஏனைய எழுதுபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அமித் ஜயசுந்தர பரீட்சை திணைக்களத்தில் 20 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி தற்போது புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!