புத்தாண்டு தொடங்கி 6 நாட்கள் கடந்தும் கலண்டர்களுக்கு தட்டுப்பாடு! வெளியாகிய காரணம்

#SriLanka #New Year
Mayoorikka
1 year ago
புத்தாண்டு தொடங்கி 6 நாட்கள் கடந்தும்  கலண்டர்களுக்கு தட்டுப்பாடு! வெளியாகிய காரணம்

முன்னர்  புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பே கலண்டர்கள் வெளியிடப்பட்டாலும், இம்முறை புத்தாண்டு தொடங்கி 6 நாட்கள் கடந்தும் காலண்டர்கள் வெளியிடப்படுவதில் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல நிறுவனங்கள் புத்தாண்டுக்கான நாட்காட்டிகளை அச்சிடவில்லை என  தெரியவந்துள்ளது. சில நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறிய மேசை காலண்டர்களை மட்டுமே அச்சிட்டிருந்தன.

இந்நிலைமைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியும் அதனால் நாட்டில் நிலவும் காகித தட்டுப்பாடும் முக்கிய காரணம். இந்த ஆண்டு கலண்டர் அச்சிட அரசு நிறுவனங்களும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும், இந்த வருடத்தில் நாட்காட்டி மற்றும் தேதி புத்தகங்கள் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளதாக  மக்கள் தெரிவிக்கின்றனர்.

  இந்த ஆண்டு காலண்டர்கள் அச்சிடப்படவில்லை. இந்த நிலைக்கு காகித நெருக்கடியே காரணம் என  அரசாங்க அச்சுக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஆனால், இம்முறை மேசை  நாட்காட்டிகள் மட்டுமே அச்சிடப்பட்டதாக அவர் கூறினார். இம்முறை அழைப்பிதல்கள் அச்சடிக்கும் பணியும் நடைபெறவில்லை. சராசரியாக, ஆண்டுக்கு அச்சிடப்படும் டைரிகளின் எண்ணிக்கை 450,000க்கு அதிகமா இருக்கும்.

. எவ்வாறாயினும், அத்தியவசிய கடமைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு சில வகையான திகதி புத்தகங்களே இம்முறை அச்சிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பானி மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!