15 வயதுடைய சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

#Police
Prathees
1 year ago
15 வயதுடைய சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெங்கல்ல, அம்பகொட்டே, தெல்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சிறுமி 13.10.2022 அன்று காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தினத்தில் பாடசாலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் குறித்த சிறுமியின் உறவினர்கள் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி இந்த சிறுமி தனது பாடசாலையின் தோழி ஒருவருடன் பாடசாலைக்கு செல்லாமல் கண்டியிலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் வந்துள்ளதாக காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு ரயிலில் வந்த வாலிபர் ஒருவர் இந்த குழந்தைகள் மீது சந்தேகம் அடைந்து குழந்தைகளிடம் தகவல் கேட்டுள்ளார்.

பின்னர், இது தொடர்பாக குழந்தைகளின் பெற்றோருக்குத் தெரிவித்ததையடுத்து, அவர்கள் வரும் வரை குழந்தைகளை தனது காவலில் வைக்குமாறு பெற்றோர் சம்பந்தப்பட்ட இளைஞரிடம் தெரிவித்தனர்.

பெற்றோர்கள் வரும் வரை அவர்கள் காலிமுகத்திடலில்  காத்திருந்தனர், அவர்கள் அங்கு இருந்தபோது, ​​​​குறித்த 15 வயது சிறுமி அவர்களைத் தவிர்த்ததாக தெரிவக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், காணாமல் போன சிறுமியுடன் இருந்த மற்றைய சிறுமியை குறித்த இளைஞன் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுமி தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி தேவை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

தெல்தெனிய பொலிஸ் நிலையம் - 081 237 4073

தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகர் - 071 859 1066

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!