உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 42,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பதிவு!
Mayoorikka
2 years ago

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 42,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடநெறிகளைப் பின்பற்றுவதற்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான பதிவுக் காலம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும், அந்த முடிவுகள் வெளியானதும், மேலும் 5,000 பதிவுகளை எதிர்பார்க்கிறோம் என்றும் பேராசிரியர் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.



