சட்டவிரோத மதுபானம் மற்றும் சிகரெட்களுடன் பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது
#Arrest
#Negombo
Prathees
2 years ago

நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் வரியில்லா சிகரெட்டுகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 64 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 400 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் அடங்குவார்.
ஏனைய சந்தேகநபர்கள் நீர்கொழும்பு, திம்பிரிகஸ்கடுவா, தலுபொட, கொச்சிக்கடை மற்றும் துன்மோதர ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



