பெத்தியாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி
Kanimoli
2 years ago

பேலியகொட - 5 ஆம் கட்டை - பெத்தியாகொட பிரதேசத்தில் நேற்று (7) இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கருத்து மோதலின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளால் அவர்கள் தாக்கப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய இருவர் ராகம போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக இரண்டு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பேலியகொட காவல்துறையினர் தெரிவித்தனர்.



