உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய சின்னம் மற்றும் கூட்டணியுடன் சுதந்திரக் கட்சி
#Election
Prathees
2 years ago

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய கூட்டணியில் புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் இதுவரை வெற்றியளித்துள்ளதாக அதன் சிரேஷ்ட பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றங்களின் வளங்களையும் ஊழியர்களையும் பயன்படுத்தி சில உள்ளுராட்சி பிரதிநிதிகள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.



