உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான முதற்கட்ட பணிகள் நிறைவு
#Election
#SriLanka
Prathees
2 years ago

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் பட்டியலின்படி 1,68,56,629 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்படும் தொகையை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.



