யாழ்ப்பாணத்தில் ஜெலிமீன் தாக்கியதில் மீனவர் ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் ஜெலிமீன் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (07) உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி குருநகர் கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற இந்த மீனவர் ஜெலிமீன் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு மாத காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அங்கு, நோயாளியின் காயங்கள் ஆறாததாலும், மற்ற உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும், ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் நேற்று (07) உயிரிழந்தார்.
இறந்த மீனவரின் பிரேதப் பரிசோதனையில் ஜெலிமீன் விஷத்தால் ஏற்பட்ட காயங்கள் ஆறாமல் காயங்கள் வழியாக கிருமிகள் நுழைந்து நோயாளியின் உடலின் பல உறுப்புகள் செயலிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த அல்ஜின் ஜெனிராஜ் என்ற 52 வயதுடைய மீனவரே ஜெலிமீன் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.



