இரண்டு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது
#Arrest
#drugs
Prathees
2 years ago

இரண்டு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி ஜெட்டி வீதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கல்பிட்டி மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களைச் சேர்ந்த 39 மற்றும் 49 வயதுடையவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



