முட்டையின் விலையை குறைக்க தீர்மானம்! அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம்
#SriLanka
#Egg
#prices
#Food
Mayoorikka
2 years ago

முட்டை ஒன்றின் மொத்த விலையை ஐந்து ரூபாவினால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்தார்.
இதன்படி, 45 ரூபா என்ற மொத்த விலைக்கு முட்டை உற்பத்தியாளர்கள் பாரவூர்திகள் மூலம் முட்டையை விற்பனை செய்யும் பின்னணியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.



