இரவு இடம்பெற்ற விசேட சந்திப்பு: உருவாகும் புதிய கூட்டணி! 48 மணித்தியாலங்களுக்குள் அறிவிப்பு
#SriLanka
#Election
#release
#Colombo
Mayoorikka
2 years ago

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.
இந்த கூட்டணி தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உத்தரலங்கா சபை, சுதந்திர மக்கள் சபை, ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயக இடதுசாரி கட்சி உள்ளிட்ட கட்சிகளின் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு(09) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.



