தமிழகத்தில் நம்பர் ஒன் யார் என்பதை வெளிப்படுத்திய போனி கபூர்

Kanimoli
1 year ago
தமிழகத்தில் நம்பர் ஒன் யார் என்பதை வெளிப்படுத்திய போனி கபூர்

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாராக இருக்கும் போனி கபூர், இதுவரை அஜித்தை வைத்து கோலிவுட்டில் 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை அதை தொடர்ந்து வலிமை தற்போது பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு போன்ற 3 படங்களை தயாரித்தவர். இப்படி தமிழகத்தில் அதிக செல்வாக்கு கொண்ட அஜித்தை வைத்து 3 முறை தயாரித்தாலும் அவருக்கு தில் ராஜுவுக்கு வந்த ஆணவம் வரல.

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு முதல் முதலாக தளபதி விஜயை வைத்து வாரிசு படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படமும் துணிவுக்கு போட்டியாக ஜனவரி 12-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனவே தமிழகத்தில் நம்பர் ஒன் விஜய் தான். அவருக்கு தான் அதிக ஸ்கிரீனில் கொடுக்க வேண்டும் என சமீபத்தில் தில் ராஜு வெளியிட்ட பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் போனி கபூரிடம், ‘விஜய் தான் நம்பர் ஒன் என தில் ராஜு கூறுவது குறித்து உங்களுடைய கருத்து என்ன?’ என்று கேட்டிருக்கின்றனர். கருத்து கூறுவது அவரவர் மனநிலை. என்னை பொறுத்தவரை கன்டென்ட் தான் நம்பர் ஒன். எப்படிப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் படத்தின் கதை நன்றாக இல்லை என்றால் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்காது.

அதேபோல் பிடித்த படங்களையும் அவர்கள் கைவிட மாட்டார்கள். அப்படிதான் பொன்னியின் செல்வன், லவ் டுடே மாபெரும் வெற்றி பெற்று சூப்பர் ஹிட் ஆனது என்று போனி கபூர் மிக எதார்த்தமாக தன்னுடைய கருத்தை பதிவிட்டார் .மேலும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் துணிவு படத்தின் பட ப்ரோமோஷன் பல வகையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடலுக்கு நடுவில் அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் பேனர்களை வைத்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. இந்த நிலையில் தான் சமீபத்திய பேட்டியில் துணிவு படம் வேற லெவலில் உருவாகி இருக்கிறது. அந்த படத்தை தல ரசிகர்கள் பொங்கல் விருந்தாக அனுபவிக்க வேண்டும்.

தனக்கு நம்பர் 1 மற்றும் நம்பர் 2 குறித்து நம்பிக்கை இல்லை, படத்தின் கதை தான் நம்பர் 1 என தில் ராஜுவுக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார். மேலும் துணிவு மற்றும் வாரிசு படங்களின் டிக்கெட் முன்பதிவு படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த வருட பொங்கல் பண்டிகையை தல தளபதி ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாட காத்திருக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!