உத்தரவாத முட்டை விலையை நடைமுறைப்படுத்த சலுகை காலம் இல்லை - நுகர்வோர் அதிகார சபை முடிவு

#Egg #prices
Prathees
1 year ago
உத்தரவாத முட்டை விலையை நடைமுறைப்படுத்த சலுகை காலம் இல்லை - நுகர்வோர் அதிகார சபை முடிவு

சந்தையில் கையிருப்பில் உள்ள முட்டைகளை தற்போதுள்ள விலைக்கு விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள முட்டைகளை புதிய விலையில் விற்பனை செய்வதன் மூலம் வியாபாரிகளுக்கு பாரிய நஷ்டம் ஏற்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த பருவத்தில் நுகர்வோரை நசுக்கி முட்டை விற்பனை மூலம் வர்த்தகர்கள் பாரிய இலாபம் ஈட்டியதால், அவ்வாறான கால அவகாசத்தை வழங்க முடியாது என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட போதிலும், பல பிரதேசங்களில் நேற்று 50 ரூபாவுக்கும் மேலாக பல்வேறு விலைகளில் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!