2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்

#exam #students
Prathees
1 year ago
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை  இன்று (23) ஆரம்பமாகவுள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை நாடளாவிய ரீதியில் 2,200 நிலையங்களில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு 331,709 பரீட்சார்த்திகளும், 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும், 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பாக மேலும் விளக்கமளிக்கும் பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் அமித் ஜயசுந்தர.

"குழந்தைகள் அனைவரும் சரியான நேரத்தில் மையத்திற்குச் செல்ல வேண்டும். தேர்வு மையத்தில் அரை மணி நேரத்திற்கு முன்பே உட்காருமாறு கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், புளூடூத் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் வைத்திருக்க தடை விதித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

பரீட்சை காலத்தில் சிறுவர்களின் போக்குவரத்து வசதிக்காக விசேட பஸ் சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!