மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆசியாவின் ராணி என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்!

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Queen #Switzerland
Nila
1 year ago
மீண்டும் இலங்கைக்கு  கொண்டுவரப்பட்ட  ஆசியாவின் ராணி என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்!

இரத்தினபுரி கஹவத்தையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கற்கள் என அறியப்படும் 510 கிலோ கிராம் எடையுள்ள அர்னோல்  கற்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அதை விற்பனை செய்வதற்கு வாங்குபவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே அதற்குக் காரணம். 2021 இல் நாட்டில் இரண்டு பெரிய இரத்தினக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சில தரப்பினர் அவற்றை விலைமதிப்பற்ற கற்கள் என்று குறிப்பிட்டனர். அவற்றில் ஒன்று 310 கிலோ எடையுள்ள சிறப்பு நீலக்கல் பலாங்கொடை சுரங்கத்தில் 2021 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது ஆசியாவின் ராணி என்று பெயரிடப்பட்டது. இதன் எடை பதினைந்து இலட்சத்து ஐம்பதாயிரம் காரட்டுகளுக்கு சமம் என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை அப்போது தெரிவித்துள்ளது.

கூடுதலாக, ஜூலை 2021 இல், 510 கிலோ எடையுள்ள அர்னோல் வகை இரத்தினக் கற்களின் பெரிய கொத்தும் இரத்திபுரி - கஹாவத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ரத்தினம் என்று அழைக்கப்பட்டது.

பின்னர் இந்த ரத்தினம் துபாய்க்கு கண்காட்சிக்காக கொண்டு செல்லப்பட்டு பின்னர் சுவிட்சர்லாந்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் அதை விற்க முடியாததால், சமீபத்தில் நாட்டிற்கே கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!