கோட்டாபயவின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதில் தாமதப்படுத்த வேண்டாம்: CIDக்கு நீதவான் எச்சரிக்கை

#Court Order #Colombo #Gotabaya Rajapaksa
Prathees
1 year ago
கோட்டாபயவின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதில் தாமதப்படுத்த வேண்டாம்: CIDக்கு நீதவான் எச்சரிக்கை

செயற்பாட்டாளர்கள் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அறையில் இருந்து ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்  வாக்குமூலங்களைப் பதிவு செய்து நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

அன்றைய தினமே பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள விசாரணைப் பணிகள் தொடர்பான உண்மைகளை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை அனுப்புமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (25) உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் எந்தப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டாலும், கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை தாமதப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ தயாராக இருக்க வேண்டாம் என நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!