இலங்கையின் கடன்களை நீக்கம் செய்ய முடியாது என கூறவில்லையென சீனா மறுப்பு

#China #SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Lanka4
Kanimoli
1 year ago
இலங்கையின் கடன்களை நீக்கம் செய்ய முடியாது என கூறவில்லையென சீனா மறுப்பு

இலங்கையின் கடன்களை நீக்கம் செய்ய முடியாது என சீனா அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படும் கடிதம், தூதரகத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட ஒன்றல்ல என சீனத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ட்விட்டரில், தூதரகம் தனது அதிகாரப்பூர்வ கடிதத்தின் கீழ் அச்சிடப்பட்டிருந்தாலும், கேள்விக்குரிய கடிதம் 'முற்றிலும் போலியானது' என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே, உத்தியோகபூர்வ தகவல் ஆதாரங்களை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ், நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2023 ஜனவரி 23ஆம் திகதி அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதம் என்று தலைப்பிட்டு இந்த போலியான கடிதம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது.
அதன்படி, இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து சீனா ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தினாலும், அவர்களின் பொருளாதாரமும் கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு வருவதால், நிலுவையில் உள்ள கடன்களை நீக்கம் முடியவில்லை என்று குறிப்பிடப்பட்;டுள்ளது.
எவ்வாறாயினும், இருதரப்பு மற்றும் வணிக கடன் திருப்பிச் செலுத்துவதற்கு 5 ஆண்டு கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் திருப்பிச் செலுத்தும் அட்டவணையைத் தளர்த்த சீனா தயாராக உள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!